ஞாயிறு காலையில Tiffin பண்ண கொஞ்சம் சோம்பேறித் தனம் வரும்… சுலபமா ஒரு சட்னி பண்ணா என்னன்னு ஒரு யோசனை வரும்…. அப்ப எலுமிச்சை சட்னி தான் நியாபகம் வரும்…. சுவையும் அலாதி… இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும்… இதுக்கு எங்க வீட்டுல fata-fat chutneyன்னு சொல்லுவாங்க….

தேவையான பொருட்கள்
எலுமிச்சம்பழம் – 1
வரமிளகாய் (காரம் ஏற்ற) – 8 அல்லது 9
உப்பு – தேவைகேற்ப
தாளிக்க
எண்ணெய் -2tbs
கடுகு – 1/2 tbs
உழுந்து பருப்பு- 1 tbs
கருவேப்பிலை- 2 tbs
செய்முறை
- மிக்ஸியில் வரமிளகாய் உப்பு போட்டு அரச்சுக்கணும்.
- அப்படியே ஒரு பாத்திரத்தில் மாத்திட்டு..
- நறுக்கி வச்ச எலுமிச்சம் பழத்தைப் பிழியனும்.
- அவ்வளவு தான்… கடாய் எண்ணெய் உற்றி தாளிக்கனும்… தாளிப்புக்கு கீழ உள்ள வருசை படி தாளுச்சா போதும்….
- சட்னி ரெடி…..