வீட்டிலேயே பன்னீர் செய்யும் வழி

என் பையன் ரொம்ப விரும்பி சாப்பிடுவான். அதுனால வீட்டுலயே செய்ய பழகினேன். கொஞ்சம் நேரம் எடுக்கும். ஆனால் வீட்டுல பண்ண திருப்தி இருக்கும். வேதிப் பொருட்களும் கலக்காமல் இருக்கும்.

வேண்டிய பொருட்கள்
1. பால்-2L (avain blue)
red colour packet இன்னும் நல்லா வரும்..
2. தயிர் -1/2 கப்
3. பொறுமை
4. ரெயின்போ FM 🙂

செய்முறை

image

1. அடி கனமான பாத்திரத்தில் பால் நல்லா காயனும்.

image

2. பால் பொங்கி வரும் போது தயிர் அதுல கலக்கணும்.

image
Stage 1

image

3. பால் திரிய ஆரம்பிக்கும். கரண்டி போட்டு காச்சிட்டு இருந்தா பால் திருஞ்சு தண்ணியா வரும். தண்ணி தனியா நிக்கும்.

4. அடுப்பு நிறுத்திட்டு ice cubes போடணும்

5.கொஞ்சம் நேரம் அப்படியே இருக்கட்டும்

image

image

6. இப்ப வடி கட்ட வேண்டியதான். பன்னீர் தண்ணியா வரும்.
வடி கட்டின தண்ணிய தனியா வச்சுக்கலாம். சப்பாத்தி பிசய நல்ல இருக்கும். அதுல protein இருக்கு.
ஒரு வெள்ளை துணில வடி கட்டணும். நல்லா பிழியணும்.. தண்ணி முழுக்க வரும் வரை.

image

7. வடிகட்டின பன்னீர் அப்படியே அந்த துணில சுத்தி வைக்கணும்

image

8. பன்னீர் மேல நல்ல வெயிட் வைக்கணும்.. அப்போ தான் ஷேப் வரும் 5-6hrs வைக்கணும். ரொம்ப முக்கியம்.. அவசர பட்டு எடுத்தா set ஆகி இருக்காது… புள்ளையார் புடிக்க குரங்கான கதை ஆகிடும்.

image

9. நல்லா செட் ஆயிடும்… Piece போட வேண்டியதான். சரியா வரலை அப்புடின்னா piece போட வராது. உதிர்ந்து போகும்.

10. 2 லிட்டர் பாலுக்கு 45-50 piece வரலாம்.

image

image

அவ்வளவு தான்..பன்னீர் ரெடி….

8 thoughts on “வீட்டிலேயே பன்னீர் செய்யும் வழி

  1. ஹலோ சிந்து என் பதிவுகளை படிக்க ஆரம்பித்துள்ளது பற்றி ரொம்ப சந்தோஷம். உங்களின் பதிவைப் பார்த்தேன் பனீர் செய்வது பற்றி விவரித்துள்ளீர்கள் செய்து பார்த்து விட்டு எழுதுகிறேன் செய்முறையை பார்த்தால் மிகவும் சுலபமாக உள்ளது

    Liked by 2 people

  2. நான் குழந்தைகளுக்காக எழுதும் Mahabaratha For Kids ஐத் தொடர்ந்து வருவதாக wordpress PRO வந்து சொன்னாரா ……அதற்கு என் மனமார்ந்த நன்ற. சிந்து தளத்திற்கு சென்று பார்ப்போம் என்று வந்தேன். இங்கே வந்தால் பால் காய்ச்சி , திரித்துக் கொண்டிருக்கிறீர்கள். Whey water சப்பாத்தி மாவு பிசையலாம் என்கிற செய்திய்யையும் தெரிந்து கொண்டேன். நன்றி.

    ஒரு சின்ன டவுட்டு….
    ரெயின்போ FM தேவை என்று சொல்லியிருக்கிறீர்கள். பால் காய்ச்சும் போதா, திரிக்கும் போதா…..எப்பொழுது போட வேண்டும் என்று சொல்லவில்லையே…..( LOL) கோபிக்கவில்லையே …சும்மாத் தமாஷ்…….

    நானும் இப்படி எழுதுபவள் தான்
    தமிழில் இங்கு எழுதிக் கொண்டிருக்கிறேன் .
    http://www.rajalakshmiparamasivam.blogspot.com தளத்திற்கு வந்து பாருங்கள் நேரம் கிடைக்கும் போது.

    Liked by 2 people

    1. வருக வருக…உங்க வரவுக்கு நன்றி…rainbow Fm விளம்பரம் போட்டு கொல்ல மாட்டங்க..அதான்..வேற ஒன்னும்மில்லை😊

      Liked by 1 person

    2. கன்னப்பநாயனார் கதை என் பையனுக்கு சொல்ல தேடிட்டு இருந்தேன்..உங்க blog பார்த்ததும் சந்தோஷம்.😊

      Liked by 1 person

  3. நன்றி சிந்து . நீங்கள் என் பதிவுகளைப் படிப்பது பற்றிக் குறிப்பிடுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அடுத்தப் பதிவு எழுதத் தூண்டும் டானிக் உங்கள் கருத்து. நன்றி சிந்து.

    Liked by 2 people

Leave a reply to rajalakshmiparamasivam Cancel reply