எள்ளு உருண்டை

எள்ளு உருண்டை

இது பசங்களுக்கு ரொம்ப பிடிச்சது (எனக்கும் தான் சின்ன வயசுல ரொம்ப பிடிக்கும்). சின்ன வயசுல என் பாட்டி டப்பால போட்டு வைப்பாங்க தெரியுமா! அதைத் திருடிச் சாப்பிட்ட அனுபவம் நிறைய..சரி விசயத்துக்கு வரேன்.

தேவையான பொருட்கள்

  • எள்ளு – 1கப்
  • வெல்லம் -3/4 கப்

செய்முறை

  1. எள்-ஐ  ஒரு வெறும் கடாயில போட்டு நல்லா வறுக்கணும். அது நல்ல பொரியும்.(வெடிக்கும்). வெள்ளை இல்லன்னா கருப்பு எள்ளு ஓகே. கருப்பு  எள்ளு ருசி அதிகம்.
  2. நல்ல ஒரு தட்டுல  கொட்டி ஆர வைக்கணும்.
  3. சுடாக இருக்கும்போது மிக்சியில போட்டா எண்ணெய் விட்டுவிடும்.
  4. ஆறினதும் மிக்சில போட்டு கொர கொரப்பா அரச்சுட்டு, வெல்லத்தை போட்டு இரண்டு சுத்து விடணும்.
  5. உருண்டையா புடிக்க வேண்டியதான்…ரெடி..
  6. தேவை அப்படின்னா ஏலக்காய் பொடி சேர்த்துக்கலாம்..
418.jpg
(c) http://www.madraasi.com

ஒரு வாரம் கெடாது இருக்கும். வீட்டில் தயாரிப்பதால் தரமான தின்பண்டத்தைக் குழந்தைகளுக்குக் கொடுத்த மகிழ்ச்சி உங்களுக்கும் இருக்கும்.

4 thoughts on “எள்ளு உருண்டை

  1. யாருக்குத்தான் பிடிக்காது எள்ளு உருண்டை. புரதச் சத்து நிறைந்தது. திருடித் தின்பதில் ஓர் இன்பம்தான். திருட்டு மாங்காய்தான் அதிகம் ருசிக்கும் சிந்து

    Liked by 1 person

Leave a reply to Pandian Ramaiah Cancel reply